காந்தாரி...ஒரு கண்ணோட்டம்...
( இது என்னுடய கண்ணோட்டம் மட்டுமே...)
இன்று, குருஷேத்திரப் போரின் இறுதி நாள்... குருவம்ச பேரழிவின் சின்னமாக யுத்தபூமியில் சின்னாபின்னமாக கிடக்கும் போர்வீரர்களின் சடலங்கள்..! மரணத்தின் வாசம் திகட்டும் புகை மூட்டங்கள்...!
அந்தப்புரத்தில் இருந்து ஒலிக்கும் அழுகை சத்தம்! அது திருதுராஷ்ட்டிரனின் தர்மபத்தினி காந்தாரியின் குரல் தான்...!
வேதனையின் சங்கொலிகளாக மற்ற அந்தப்புர வாசிகளிலும் அது பரவி மாற்றொலி கொண்டது...!
பட்டுத்திரையால் மறைத்திருக்கும் கண்களிலிருந்து ஆறாக நீர் வழிந்தோடுகிறது.
" என்னிடம் அநீதி காட்டினார்களே...!
காந்தாரி விம்மி விம்மி அழுகிறாள்..."
ஆமாம். காந்தாரியிடம் அநீதி காட்டினார்கள்!!
ஒரு குருடனை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன குறை இருந்தது காந்தார இளவரசியிடம்..?
பால்யத்திலிருந்தே சிவ பக்தை..." 100 புத்திரர்கள் உனக்கு பிறக்கட்டும் " என்று வரம் அளித்தார் சிவ பெருமான்.
ஆனால் ஒன்று கூட மிஞ்சாமல் அழிந்து போனார்களே...!
உயர்ந்த குலத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்தினாலயே, காந்தார ராஜாவான சுபலர் , தன் மகளை பார்வையற்ற திருதுராஷ்ட்டிரரை திருமணம் செய்து கொடுத்தார்கள்..! பாவம், பெண் மனதை புரியாமலே.
இது அப்பா, மகளிடம் காட்டிய அநீதியல்லவா...?
ஒரு நாள் ஹஷ்தினாபுரியில் வியாசர் பசியோடு வந்தபோது காந்தாரி அவரை உபசரித்து சாப்பாடு பரிமாறினாள்...
திருப்தி அடைந்த வியாசர் ஹஷ்தினாபுரியின் மகாராணிக்கு 100 புத்திரர்கள் பிறப்பார்களென சிவனின் வரத்தை மேலும் வலுவாக்கினார். ஆனால், உத்தம புத்திரர்கள் பிறக்கட்டும் என்று வாழ்த்தவில்லை...!!!
இது அநீதியா, அய்யோ விதியா...?
தன் கணவர் குருடர் என்பதினால், திருமணம் செய்த நாளிலிருந்தே, பட்டுத்துணியால் தன் அழகு கண்களை கட்டி வைத்தாள்... கண்கள் வெளி உலகத்தின் ஜன்னல்கள்..! அரன்மனையில் ஒரு, பட்டமஹிஷியாக, ஒரு மனைவியாக, ஒரு தாயாராக பார்த்து சந்தோசம் அடையக்கூடிய எத்தனை எத்தனை நிமிடங்களை, தன் கணவருக்காக தியாகம் பண்ணிய புண்ணியவதி இவள்! பதிவிரதா தர்மத்தில் சதீ தேவியையும் வென்ற மஹதி!
அவளுக்கு என்ன கிடைத்து விட்டது...?
இருண்ட வாழ்க்கையா..?
அதோ, வழி தவறி வாழ்ந்த தன் மைந்தர்களின் மீள முடியாத உயிர்களா...?
ஒரு வேளை .. காந்தாரி கண்களை மறைக்காமலே வாழ்ந்திருந்தால்...? கணவரின் கண்களுக்கு வெளிச்சம் காட்டி வாழ்ந்து வழிநடத்தி இருந்திருக்கலாம்... ,
தன் குழந்தைகளின் வளர்ச்சியை பார்த்து அவர்களை நல்ல வழிக்கு நடத்தியிருந்திருக்கலாம்.... தன் சகோதரன் சகுனியின் சூது மனதை ஆரம்பத்திலேயே தெரிந்து கண்டித்திருக்கலாம்..!
" எல்லாம் கடந்து போனதே..." !!!
" மரணத்தின் துர்கந்தம் எனக்கு தாங்க முடியவில்லையே...! "
காந்தாரி திரும்பவும் கதறி அழுதாள்..
கடைசியில்,
கிருஷ்ணா! நீயும் என்னிடம் அநீதி காட்டினாய் அல்லவா..?
என் பார்வை பட்டால் துரியோதனன் காப்பற்றப்பட்டுவிடுவான் என்பதை தெரிந்து கொண்ட நீங்கள் அவனுடைய இடுப்பு பகுதியை மறைத்து வர சொன்னீர்களே... ஏன்?
காந்தாரிக்கு கோபமும், வேதனையும் தாபமும் தாங்க முடியவில்லை..
திரை மூடிய கண்களிருந்து தீ பாய்ந்தது..
யத்தத்தின்போது பல தடவை வாழ்த்தினது ஒரே வாரத்தை தான்.. தர்மம் வென்றிடும்...
இருந்தாலும் 100 புத்திரர்களை இழந்து விட்ட தாய்!
ஒரு தாயாய் அவள் கிருஷ்ணருக்கு சாபம் கொடுத்தாள்..!!
"ஹே! கிருஷ்ணா! இன்றைக்கு 36 வருடங்கள் தாண்டி உன்னுடைய யாதவ வம்சம் அழிந்து போகட்டும்..! நீ, கேவலம் ஒரு வேடனால் கொல்லப்படுவாய்..
பத்தினியான காந்தாரியின் சாபம் பலித்தது..!
அந்த சாபம் ஒரு யுகத்தின் முடிவு குறித்தது...!!
சுவர்காரோஹணபர்வம் என்ற பதினெட்டாமது பர்வத்துடன் வியாச மகாபாரதம் முடிகிறது * * *
மிக ஆழமான கருத்தை அழகான வரிகளில் சொல்லியிருக்கின்றீர்கள்..எழுத்தில் தெரிகிறது நல்ல முதிர்ச்சி....சித்திரமும் பேரழகு..
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி..
ReplyDeleteஅருமை, வாழ்த்துகள்
ReplyDeleteமிக நன்றி கோகுல்..
ReplyDeleteகாந்தாரி பாத்திரப் படைப்பு பற்றிய வித்தியாசமான கண்ணோட்டம். ஆழமான கருத்துக்கள். சிறப்பான தமிழ் நடை.
ReplyDeleteஉங்கள் வருகைய்க்கும் ஊக்கமூட்டும் கருத்துகள்க்கும். மிக நன்றி அய்யா...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பதிற்வுக்கும் ரொம்ப நன்றி அய்யா..
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பதிவிற்க்கும் மிக நன்றி்அய்யா..
ReplyDeleteஅருமை
ReplyDelete