அம்புலிப் பொண்ணை காப்பாற்று

அந்திப்பெண்
அழுகிறாள்..
பிரசவப்
பெருவலியில்..
துடிக்குமந்த
வேதனையில்
செந்தூரம்
வழிகிறது...

இரவுத்தாதி
இருளென்னும்
போர்வை
கொடுக்கிறாள்..

புல்லினக்
குருவிகள்
குலவைகளிட்டார்கள்..

வந்து பிறந்தது
ஆணா பெண்ணா?
ஆகா...
அம்புலிப்பெண்
உதித்திருக்கிறாள்..

பெண்ணாய்ப்
பிறந்தாளேயென
கடலன்னை
அலைக்கைகளை
மணல் மார்பில்
அடித்தழுகிறாள்...

வட்டமிடும்
வல்லூறுகளின்
அலகுகளில்
அகப்படாமல்
எப்படிக்காப்பேன்..?

பதினான்கு தினங்களில்
பருவம்
கொள்வாளே!!
காப்பாற்றும்
வேலை
நமக்கெதற்கு..
கொன்றுவிடலாமா
என
ஆலோசனை
சொல்கிறது
ஒரு
கருத்த மேகம்..

நடுங்கிய
நட்சத்திரங்கள்
சூழ்ந்து
அரணாகின்றன...
கொன்று
கொண்டேயிருந்தால்
பெண்ணினம்
பூமியில்
புதைந்துபோகாதா?
பெண்ணென்று
இவளை
அழித்தால்
மனிதப்பிறப்பே
மண்மூடிப்போகாதா?

தந்தையும்
தலைமை
அமைச்சனுமான
சூரியனிடம்
கேட்டால்..
பொன்னாலான
பகலில்
இவளை
பாதுகாக்கலாம்..
இல்லையெனில்
மீண்டுமொரு
பிரளயம்
வரை
காத்திருக்கலாம்...

Comments

  1. அழகான உருவகம்..ஆனால் அம்புலிப் பெண் அல்லவா?

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி

    ReplyDelete
  3. (அந்திப்பெண் பெற்றெடுத்த அம்புலிப்பெண். கடலன்னை பெண்ணாய்ப் பிறந்தவளைக் கண்டு கலங்கினாள்; கொன்றுவிடலாமா? என சதி ஆலோசனை; கொன்று கொண்டேயிருந்தால் பெண்ணினம் பூமியில் புதைந்துபோகாதா? உண்மை சுட்டதால் மீண்டுமொரு பிரளயம் வரை காத்திருக்கப் போகிறார்களாம்? நடக்குமா இவர்கள் நாடகம்? அம்புலிப்பெண்ணைக் காப்பாற்றுவோம்.) கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக நன்றி அய்யா..

    ReplyDelete
  5. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
  6. நிச்சயமாக.. உங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

பூஜைக்காகாத காகிதபூ....