செய்தி மழையில்.....!

செய்திகள்
ஒரு மழையாய்
பெய்து
முடிந்திடும்....

மண்ணில்
தடங்களும்
மாறி விடும்...

சில செய்திகள்,
ஓக்கி புயலாக
மனதில்
கெடுதியின்
பீதி
பரப்பும்...

நிகந்த
நஷ்ட ஈடுகள்
நாளை
ஏடாகும்..

செய்திகளுக்கு
கைகால்
முளைக்க
வைக்கும்
காட்சிகள்...!!
பிரமித்து
பார்க்கும்
அவர்களோ
பாவம்!

பொறுமையின்
மக்கள்..

தீர்வில்லாமல்
நீளும்...
பிரச்சினைகள் ...
மாயக்காட்சிகள்
காட்டி
மறைந்திடும்..!!

பொய்
முகங்களின்
உண்மை
தேடி
வீணாக்கவா...?

நேரம்...
விலையுயர்ந்தது !!

சிப்பிக்குள்
சில
முத்துகள்
பிறக்கும்...!!!
செய்திகளில்
சிக்காமல்
செய்திகள்
உங்களைச்சுற்ற
வையுங்கள்..

அந்த
நற்செய்தி
நாளைய
வரலாறாகட்டும்...!!

Comments

  1. செய்திகளின் சுமை குறித்த செறிவான கவிதை...அருமை.

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி..

    ReplyDelete
  3. மழையின் செய்தி, மழையே செய்தி, மலையாய்ச் செய்தி. ஊடகங்கள் ஒக்கிப் புயல் பீதி பரப்பும். சேதம் பற்றி சில நாட்கள் செய்தி உலாவும். கைகால் முளைத்துக் கிளைத்து விரியும். மிகச் சிறப்பான கவிதை.

    ReplyDelete
  4. ஊக்கமூட்டும் உங்கள் பாராட்டிற்க்கு மிக நன்றி அய்யா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூஜைக்காகாத காகிதபூ....

அம்புலிப் பொண்ணை காப்பாற்று