ஆசை ஆசை....ஆசையோ ஆசை......!!!
கிருகபிரவேசம்
பிரமாதமாக
முடிந்தது...
தம்பதிகள்
நேசம்
அறைகளில்,
பரவத்தொடங்கி
பல நாள்கள்
ஆகிவிட்டன...
தாமதமாக
வாழ்த்த
வந்த
விருந்தினர்களும்
குறைய
ஆரம்பித்தனர்.
ஒரு நாள்
வாசப்படியில்,
கார் இன்சூரன்சின்
விளம்பரம்...
கண்ணில் பட்டது.
ஈ.எம் ஐ.
இருக்கே..
விண்மீன்கள் என
மின்னும்
கண்கள்...
காரின்
பல வண்ணங்கள்
பார்த்து
மகிழ்தார்..
எண்ணற்ற
எண்ணங்கள்...
ஆசை
கொண்டு
குதித்தது....!!
போன் போட்ட
தருணத்தில்
டெஸ்ட் டிரைவிங்கும்
ரெடி...
மகிழ்ச்சி
நிரம்பின
சுகமான
பிரயாணம்...
ஆனால்,
ஈ.எம்.ஐ.
மற்ற
கட்டணம்..??
முதல்கட்டணம்
இவ்வளவு ரூபாய்....??!!!
குழம்பினார்,
திரும்பவும்..
மனதில்லாமல்...,
மனக் கணக்குகள்
கூட்டிக்கழித்து பார்த்தார்கள்....
நகைகளும் ,
காரின்
ஆசைத் தராசும் ,
சமமாயில்லை.
நடுத்தர
மனிதர்களின்
நகைகள்
வங்கிகளில்
தூங்குவது
வழக்கம் தான்....!!
விண்மீன்கள்
திரும்புகையில்
மோசம் போன
ஆசையின்
ஊஞ்சல்
தள்ளாடி தள்ளாடி
தூக்கமும்...
இல்லாமல்..
பொல்லாத
சிந்தனைகள்
கூடுகட்டும்
மனம்
கடைசியில்..
கார் வேண்டாம்
என்ற
முடிவில்
தூங்காமல்
தூங்கினர்...
காலையில்...,
ஓரு
தகவல்
வந்தது.
" மனைவிக்கு
பதவி ஏற்றம்"
அலுவலகத்திலிருந்து...
விண்மீன்கள்
தெளிவாக
மின்னத்துடங்கினர்..
என்னடா..!!
இ.எம் .ஐ.
நாங்களும் கார்
வாங்குவோம்!!
நடுத்தர கார்க்கனவு கொண்டோரை நேரில் இருந்து பார்த்து எழுதியது போல் இருக்கிறது..மிக நேர்த்தியான எழுத்து
ReplyDeleteமிக மகிழ்ச்சி
ReplyDeleteநடுத்தர மக்களின் கனவு கார்ப்பயணம்! அதை சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றி..
ReplyDeleteSuperr😘😘😘
ReplyDeleteThank you ma..
ReplyDeleteகார்க் கனவு யாருக்குத்தான் இல்லை! இ.எம்.ஐ ஒரு அட்சய பாத்திரம். "நாங்களும் கார் வாங்குவோம்ல!"
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா
ReplyDelete