பெண்ணே நீ உலகின் பெரும் சக்தி...
பெண் என்றால் ...பொறுமை, பெண்மை, பண்பு, அன்பு,மென்மை... இப்படி பல்வேறு குணங்களால், குறிப்பாக இன்றய தினத்தில் அவள் வாழ்த்தப்படுகிறாள்.
உண்மை தான். ஆனால் இத்துடன் மாறுதலான சிந்தனைகளும், கல்வியும், சுயமரியாதை இழக்காமல், எழும் துணிச்சலும் பெற்ற பெண்கள் தான் சாதனை பெற்றிருக்கிறார்கள்.
உதாரணமாக..
மிகுந்த கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரேசா, பெண்கள் வாழ்கை தரம் மேம்பட செய்வதற்காக உழைக்கும் பெண்மணி மேதா பட்கர், அஸாமில் சுடப்பட்ட குடிமக்களுக்காக கடுமயாக உண்ணாவிரதம் இருந்த ஐரோம் சர்மிளா...
1998_ல் பத்மபூஷன் பரிசை பெற்ற லக்ஷ்மி சேகல் (1914_2012 ) என்பவர் ஒரு டாக்டர் ஆக சேவை செய்தவர். சுதந்திர போராட்டகாலத்தில் காயமடைந்த பலருக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசீய ராணுவத்தில் பெண்கள் பிரிவான "ஜான்சி ராணி படை"யை தொடங்கினார்...
லலிதாம்பிகை அந்தர்ஜனம்: (1909_1987) பிராமண சமுதாயத்தில் பிறந்திருந்தும் பெண்களுக்காகவும், அன்று கீழ் சாதி என்று பின்தள்ளப்பட்டிருந்த ஜனங்களுக்காகவும் இவர் எழுதியும், பொருதியும் வாழ்கை பயனம் செய்தார்கள்.
இவர் இயற்றிய " அக்னிசாக்ஷி" என்ற நாவல் கேந்திர சாகித்திய அகாதமி விருது பெற்றது.
கிரண்பேடி: 1980 ல் சிறந்த மகளிர் விருது பெற்ற இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி...
பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் கொண்ட பெண்களுக்கு கூடவே அதிகாரமும் கிடைத்தால் பல மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்று நிரூபித்தார்....
இவர் தற்போது புதுச்சேரியில் லெப்டினன்ட் கவர்னர் ஆக பணியாற்றி இருக்கிறார்.35 வருடங்கள் காவல் துறையில் சிறைந்த சேவை செய்தார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் "நைட் பட்ரோல் சிஸ்டம்" கொண்டு வந்தார் பொதுமக்களிடமும் , குற்றவாளிகளிடமும் நேரடியாக பேசிக்கொண்டு அவர்களின் குறைகளை சரி செய்தார்."பீட் போகஸ்" சிஸ்டம் கொண்டு வந்தார்.
டில்லி போக்குவரத்து காவல் நிலயத்தில் பெருமை வாய்ந்த சேவைகளை செய்தன.
1993_ல் தீகார் ஜெயிலில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வந்தார். போதைப்பொருள்கள், பாலியல் வன்முறை முதலியன குற்றசாற்றுகளால் தண்டிக்க பட்ட கைதிகளை மாற்றி அமைக்க கடினமாக உழைத்தார் .
படித்த கைதிகளை வைத்து படிக்காதவர்களுக்கு கற்று கொடுத்தார்
யோகா,விளையாட்டு மற்றும் போதை நிவாரண பாடங்களை நடத்தினர்..
இப்படி விழிப்புணர்வு ஊட்டி ஜெயிலை ஆசிரமம் ஆக மாற்றி அமைத்தார்..
இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். குற்றம் செய்யும் நபருக்கு தண்டனை விட அதிக மானசாந்தம் கொடுக்கிறது தான் சிறப்பு..
இந்த விழிப்புணர்வு நாம் முதன் முதலாக பழகும் பெண்ணான அம்மாவில் இருந்தே ஆரம்பம் ஆனால் ....எல்லா வித வன்முறைகளும் ஒழிக்க முடியும்.
அழகான செய்திகளின் தொகுப்பு...
ReplyDeleteஉங்களுக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துகள்.
மிக மகிழ்ச்சி
ReplyDeleteamma romba nala iruku . happy womens day ma.
ReplyDeleteThank you ma
Deleteமகளிர் தினத்தன்று சாதனைப் பெண்கள் பற்றிய சுருக்கமான பதிவு . நிறைவான பதிவு. நன்றி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி..
ReplyDelete