கோதுமை பொம்மை பேசுவது

            (இப்படம் கோதுமை மாவில் செய்யப்பட்டது )


             கோதுமை  பொம்மை  பேசுவது....!

பார்த்தீர்களா....இப்படியும் என்னை வடிவமைக்கலாம்..!
நான் போசியா( poaceae ) குடும்பதில் பிறந்தவ... என்னுடய சிற்றினம்  triticoae , பேரினம்  tritium... தெரியுமா..?
மெசோப்பட்டோமியா காலத்திலயே என்னோட முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களோட பூர்வீகம்  தென்மேற்கு ஆசியாவாம்...
முழு தானியமாக என்னை  சாப்பிடுவது சிறப்பாம்
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிற தன்மையும் எனக்கிருக்கு.   ஏன்  என்றால்  என்கிட்ட நிறைய தாதுப் பொருட்கள் இருக்கின்றன.
பொட்டாசியம், மக்னீசியம் , தயாமின் இரும்பு, சிங்,( zinc) பி. வைட்டமின்கள்......
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....
இப்போ உங்களுக்கு என் மேலே கொஞ்சம் மதிப்பு வந்து விட்டதா..?
கேளுங்க.. கேளுங்க...
உங்க நரம்பு மண்டலத்தை எனது தயாமின் மேம்பட செய்யும். இம்மாதிரி , நார்சத்து மலசிக்கலில் அவஸ்தை  படுகிறவர்களுக்கு    வரமாகும்...
தினமும் என்னையை சாப்பிடுவதால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் விலகி இதய வலிமையை பெறலாம்.
குடல் புற்றுநோய், எலும்பு தேய்மானம், இவை தடுக்க விட்டமின் _ ., செலினியம் போன்ற பொருட்கள் கைவசம் இருக்கு.
நான் ஒரு மருத்துவர் மட்டும் இல்லை,  beautician   கூட... என் வசம் விட்டாமின்_  E  இருப்பதால் மென்மையான தோலும் , இளமையும் தக்க வைக்கலாம்..
சரி, நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்லவா....?

நான் ஒரு புல் தாவரம்  என்பது தெரியுமே..!  எனது புல்லில் இருக்கும்  chlorophil  மனித இரத்த உற்பத்தியை துரிதப் படுத்துமாம்..
அதாவது என்னுடய  chlorophill  மூலக்கூறும் உங்கள் இரத்தத்தில் உள்ள  ஹீமோக்ளோபினில்   இருக்கும் ஹெமி மூலக்கூறும்  நன்றாக ஒத்து போகுமாம்....
இதைய antibacterial  ஆகவும் பயன் படுத்தலாம். உள்ளேயும் உள்கொள்ளலாம், உடலுக்கு வெளியேயும் பயன் படுத்திக்கலாம்...
ஆஹா...! எவ்வளவு நல்ல விஷயம்...! இப்ப புல்ஜூஸாவும் , மாத்திரை வடிவத்திலும்   பரிவர்த்தனை செய்து கூட நான் உங்கள் பக்கத்தில் வந்தது தெரியுமா...?
உங்ளுக்கு கவலையே  வேண்டாம்  தோழர்களே.... ,  என்னை வித விதமாக சமைத்து  சாபிடுங்கள்....
சரீங்களா..?
____ ____  ____  ____ _

                                                                                                            -சுபா  ரவீந்திரன். 

Comments

  1. செய்திகள் அருமை; சொல்லிய விதம் அதைவிட அருமை!

    ReplyDelete
  2. உங்கள் வாழ்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. கோதுமை பொம்மை அழகு. செய்திகள் அருமை.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

பூஜைக்காகாத காகிதபூ....

அம்புலிப் பொண்ணை காப்பாற்று