பதில் சொல்லும் கண்கள்

பதில் சொல்லும் கண்கள் 


அழகேறும்   பூமித்தாயே.....

அழுகின்றது 
ஏனோ தங்கம்...?
தனித்தங்கமானது 
தான் சோகம்....

இனி 
இந்த 
புல் 
கொடிகள் 
மட்டும்..

அதனால்  
என்னாச்சு
தாயே..?

அடுக்கடுக்காய் 
மாளிகை 
இருக்கே...?

கேள்விக் காரரே..
இந்த 
அடுக்குமாடிகளும் 
பாரம்...!

இதில் வாழும் 
மனித இனமும்.
மனிதா்
உன் தோழர் தானே ...?
மண்ணின் பாடகர் தானே....?

கீதங்கள் 
பாடிக்கொண்டே...., 
கிளைகளையும்
வயல்களையும்
பார்த்து 
சொரியும்  
நீரும்...

அணைகட்டி
நிறுத்தும்
மனிதா்..

உரிமை 
கொண்டபின்பு..
ஆர்ப்பாட்டம் , போராட்டங்கள் .....

பட்டாம்பூச்சிகளாய் 
அன்று
பறந்த 
பெண்குழந்தைகளோ.....
இறகற்ற 
பூச்சிகளாய்..
இரவில் 
இடம் 
தேடுவதேனோ....?

மதங்களும் 
சாதிகளுமாய்
பெருகும் 
இனங்கள் 
ஏனோ...

நான் 
பெற்றசாதிகள் 
இரண்டே...

ஆண்சாதியும் பெண்சாதியுமே...

வேதம்
தெரியாமல் 
வாதங்கள் 
ஏனோ...?

ஆயுதங்கள் 
அதிகாரிகள் 
ஆனால் 
அமர்க்களம்   
என்பது 
வேதமாகும்....

பஞ்ச பூதங்களும் 
தாழ்போட்டு பூட்டும்
பொன்கூடோ
மானிடப்
பிறவி..!!

அமிர்தம் உண்டு 
அழகு
காட்டும் சிலர்...

சுடுரத்தம்
விற்று 
நஞ்சுண்டிடும்   
பலர்....!
இனி....
என்ன
கேள்வி 
உனக்கு...
எங்கே..,
ஓ..
நீயும்..
ஒரு ..
கேள்விக்காரன்......

*      *         *         *       *

Comments

  1. மெல்லிய வரிகளில் துள்ளும் கவிக்கணைகள்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையான வரிகள்

    ReplyDelete
  5. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி சார்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

பூஜைக்காகாத காகிதபூ....

அம்புலிப் பொண்ணை காப்பாற்று