நான் தமிழை நேசித்த கதை...

1988ஆம் வருடம் அக்டோபர் 22ஆம் தேதி தான் முதன் முதலாக என் கணவருடன் தமிழகத்துக்கு  அடியெடுத்து வைத்தேன்.
எங்களுக்கு   அரசு குடியிருப்பு கிடைக்க  தாமதமாகும்  என்பதால்      நகரத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு  இருந்தேன்...
   

புதுஇடம்.. !
புதுமொழி!
கொஞ்சம் பயமாகவே இருந்தது ....

அவருக்கு ஷிப்ட் டூட்டி.. ஓவர்டைம் என்றால் ரொம்ப நேரம் தனிமையில்  இருக்கவேண்டியதிருக்கும்....

வீட்டு தலைவாசல்  திறந்தால்  ரோடு.
எதிரே நகைக்கடக்கார
முதலாளிகளின் வீடுகள். அங்கே திருடர்கள் ஏரியா என்று தெரிந்ததினால் முன்வாசலை திறப்பதே இல்லை...

வடக்குவாசல்  திறந்தால்  பக்கத்தில் ஒரு சிறிய  வீடு. காது சரியா கேட்காத ஒரு பாட்டி மட்டும் இருந்தாங்க...

கொஞ்சம் தள்ளி வீட்டு ஓனர் குடும்பம் இருந்தார்கள். மொழி  தெரியவில்லை என்றாலும் பாசமா பழகினாங்க..

ஒரு நாள் வீட்டு ஓனருடைய அப்பா வாசப்படியை காட்டி கத்தி பேசினாங்க..!

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. உடனே பாட்டி  ஒடி வந்து  தண்ணியை  தெளித்து கோலம் போட்டாங்க. தினமும் கோலம் போட்ட பின் சந்தோஷமா எங்ககூட உட்கார்ந்து  சாப்பிடுவாங்க.

எவ்வளவு மெதுவாக வேலை செய்தாலும் நேரம் நிறைய மீதி இருக்கும்...

புத்தகங்களை படித்தும்    படங்கள் வரைந்தும் பொழுது போனது...!

வடக்கு வாசல் வழியாக வானத்தை பார்பேன்..
மொட்டைமாடிக்கு மேல ஆண்டெனாக்களில்..  பாவமாய்  காகங்கள் உட்கார்ந்திருக்கும்

எனக்கு என் ஊரில்  உள்ள பலா மரம் ஞாபகத்தில் வந்தது.  நிறைய மரங்கள் சுற்றியுள்ள  நிறைய முறிகள் உள்ள வீடு...!

அப்பாவின்  கனமான சத்தம் ஒலிக்கின்ற மாதிரி...
பெரிய அண்ணன் படி படி என கோபத்துடன் சொல்வது,
இரண்டாவது  அண்ணன், சின்ன அண்ணன் , சின்னக்கா , பெரியக்கா அவர்கள் கூட நானும்  சேர்ந்து அந்தாக்ஷரி சொல்ல, பொய் பாட்டு பாடி ஏமாற்ற , சண்டை வந்தால் அம்மா இடையில் வந்து சமாதானப்படுத்த.....,
இப்படி ஞாபகங்கள் கொட்ட ....
எனக்கு அழுகை  வந்தது...!
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் சபோளாவுக்கு பெரிய வெங்காயம், வெளுத்துள்ளிக்கு   பூண்டு , ஸாக்‌ஷாவுக்கு தாழ்ப்பாள்....இப்படி ஒவ்வொன்றுக்கும் பெரிய   வேறுபாடு இல்லை..அதனால் எளிதாக படிக்க முடிந்தது..

ஒரு நாள் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க  திடீர் என வீதியில் ஒரே கூட்டமும் சண்டையும்...

பிறகு பாட்டி சொல்லி தான் புரிந்தது.. யாருக்கோ செயின் திருட்டு போனதாம்.

எனக்கு  பயம் அதிகரித்தது..

ஊரில் இருந்து கடிதங்கள் வரும்போது ரொம்ப  சந்தோஷமாக இருக்கும்.

ஒரு நாள் தாளமேளத்துடன்  பூக்கள் வைத்து அலங்கரித்தபடி  ஒரு வாகனம் ஒன்றை பார்த்தேன்! அதில் வயதான ஒரு தாத்தாவை உட்காரவைத்து சந்தனம் பூசி நெத்தியில்  துட்டுவைத்து  முன்னாடியும் , பின்னாடியும்..நிறைய
பேர் நடந்து போனது பார்தேன். இந்த காட்சி முதன் முதலாக தான் பார்க்கிறேன். இது இறுதி சடங்கு என்பதை புரிந்து விட்டேன்.

இப்படியே நான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொண்டேன்

ஒரு நாள் எதிர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து சிரித்தேன் ..

அவங்க  அதை எதிர் பார்த்தது போல என்கிட்ட ஓடி  வந்தாங்க..

தினமும் அவங்களுக்கு  தின்பண்டங்கள் செய்து கொடுத்தேன்...
கோலம் போட கற்றுக்கொண்டேன்..
அப்படியே அவர்களின் தாய்மார்களோடு பழக தொடங்கினேன்.

முதல்  பையன்  பிறந்த பிறகு அவன் அப்பா வீட்டில் இல்லை என்றால் ,கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போக, மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போக..பிறகு தப்பு தப்பா தமிழ் பேசும்போது  கேலி பண்ணி சிரிக்க , இப்படி பாசத்துடன்  மூன்று வருடங்கள் கடந்து போனது தெரியவில்லை.
பாசத்துக்குதான் மொழி இல்லையே..
பிறகு குவார்ட்டர்ஸ் கிடைத்தது. பல வருடங்கள் அங்கே வசித்தேன். நான் தமிழை நேசித்தேன்...

நாங்கள் தீபாவளி, பொங்கல் , ஓணம் பண்டிகை இப்படி எல்லா பண்டிகைகளும்
ஒன்றாக கலந்து கொண்டாடினோம்.

அங்கே கிடைத்த நண்பர்களின் பாசம் இன்றும் தொடர்கிறது....

வந்தாரை  வாழவைக்கும்  தமிழகம்  என்பது உண்மை தான்...!

இல்லையென்றால்...,

எனக்கு  இனிமையான   தமிழ் மொழியில் எழுதமுடியுமா.....?

Comments

  1. அழகான வரலாறு..நல்ல தமிழ்...

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கு மிக நன்றி..

    ReplyDelete
  3. நீங்கள் எழுதியுள்ள தமிழை பார்க்கும் போது 30 ஆண்டுகள் நீங்கள் தமிழகத்தில் இருந்தது போல தெரியவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற பிறப்பிலேயே தமிழ் உங்கள் உதிரத்தில் ஊறியிருக்க வேண்டும்.

    தமிழ் தூய்மையாய் மட்டுமல்ல , உங்கள் எழுத்து நடையும் மனதை கவர்கிறது.

    மெல்ல தமிழ் இனி சாகும் என்ற மா பெரும் கவியின் கூற்று முதன் முறையாய் பொய்யாகும் என எண்ணி மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு எனக்கு பரிசு கிடைத்த போலவே இருக்கு. ரொம்ப மகிழ்சி.. மிக நன்றி சார்..

      Delete
  4. நெகிழ்ச்சியான அனுபவங்கள். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது தங்கள் விஷயத்தில் கைகொடுத்துள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

பூஜைக்காகாத காகிதபூ....

அம்புலிப் பொண்ணை காப்பாற்று