தானே இயங்கும் இயந்திரங்கள்
தானே இயங்கும் இயந்திரங்கள்
பொழுது விடியும் முன்னே,நான் என்னையே எழுப்புகிறேன். மீண்டும் தூங்க தோன்றும் கண்களை சிரமப்பட்டு திறந்து வைத்து வழக்கம்போல் சமையல் அறையில் செல்கிறேன்.
பின்பு அதுவரைக்கும் என் கூடவே போராடின அடுப்படியை விட்டு சென்று..,துளிகூட ரசிக்காமல் ஒரு குளியல்......பின்பு காலை உணவும்....
அப்புறம் ஒரு போலி புன்னகையுடன் வெளியே.....வெயிலில்.....
என்னுடைய பளபளக்கும் உடைகளும் வேகமான நடையும் பொறாமைகொண்டவர்களை உருவாக்குகின்றது என்று எனக்கு தெரியும்.
மணி பத்து தாண்டிப்போனால் உயர் அதிகரியுடைய பற்றி எறியும் பார்வைக்கு முன் குற்றஉணர்ச்சியுடன் என்னுடைய இருக்கையை நோக்கி சென்றேன்...பின்பு கோப்புகளுக்குள்....
கடலில் தொலைந்து போன பொருளை தேடுவது போல், கோப்புகளுக்குள் நான் சோர்ந்து போகிறேன்.
நேற்று, சமையல் செய்யும் போது தீ காயம் ஏற்பட்ட விரல்கள், சிவப்பு நாடை சுற்றிய கோப்புகளில் பட்டு பட்டு வலித்தது.
மதிய உணவு சாப்பிடும் போது, சக ஊழியர்கள் கேலி கிண்டல்கள் சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள், ஆனால் எனக்கென்னமோ எரிச்சல் வந்துவிட்டது.
சூரிய தேவன் மேற்க்கு திசையில் மெல்ல மெல்ல சாயும்போது அவனுடைய நிழலாய் வீட்டுக்கு திரும்பினேன்.
சம்பள தினங்கள் எனக்கு சங்கட தினங்கள் ஆகின்றன, இன்ஸ்டாலமென்ட்கள் நிலுவையிலாக....., மின்சார கட்டணம், பள்ளி கட்டணம், எரிவாயு கட்டணம், பால், பலசரக்கு ..... இப்படிக்கு எல்லாமே எனக்கு சுற்றிலும் மல்யுத்தம் செய்யும் போது...என்னுடைய சம்பள ரசீது ரொம்ப..ரொம்ப...சிரியதாகிறது.
கணக்குகள் சொல்வதற்காக செல்வதற்கு முன், அதை விட பெரிய கணக்குகள் என்னிடம் தூக்கி வீசி, என்னுடைய துணைவன் சம்பள தினம், விலை உயர்ந்த மதுபானகளுடன் பகிர்ந்து கொள்ளும் வேளையில், நான்...நான்....என்ன செய்வேன்!
அப்போதும் என்னுடைய சமையல் அறையிலிருந்து கொதிக்கும் குழம்பின் வாசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை ஆசை படுத்துகின்றது.
* * * * * * * * * *
மீண்டும் ஒரு பொழுது விடிந்தது.............!

ஒரு சகாப்தத்தின் வேதனைக்குரல்...
ReplyDeleteநாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை..
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை..என்ற கவிதையை நினைவூட்டும் பதிவு...
வாழ்த்துகள்...இன்னும் எழுதுங்கள்..
எழுங்கள்...
மிக்க நன்றி Sir...
Deleteஉணர்ச்சிகளுடன் போராடி சலித்துப் போன பெண்ணின் ஒரு நாள் பொழுது வெளிச்சம் கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி Sir...
Delete