குமரியில் உதயம்


ஐங்கரனே ஆறுமுக சோதரனே வந்தனம்

            மார்கழி பனித்துளிகள் நிரம்பி நீராகி வடிந்த 
            பின்  வந்த தை மாதமே உனக்கு வந்தனம் 
          
            உன் வாசப்படியில் பொங்கல் போட்ட  
            பொன்  பாத்திரம் மின்னுகிறேன் வணங்குகிறேன் 
            எல்லோரும் நலம் பெருக 

            வானோர் புகழ்ந்திடும் பாரத பூமியின் புகழ் 
            பெற்ற முக்கடல் சங்கமஸ்தானத்தில் 
            கன்னியாகுமரியின் மலையோர கிராமத்தில் 
            ஓர் சிறு கோனிலிருந்து உன்னை நான் பார்க்கிறேன் 
            வணங்குகிறேன்  
            வண்ணங்கள் கோர்த்து மழவில்க்வடியாடா 

            வெண்சங்குகளாயி மின்னும் வெள்ளைத்தாமரைகள் 
            பேறும் குளங்களும் 
            மறுக்கரையிலும்  செங்கமலங்கள் 
            நாட்டியமாடும் குளங்களும் 
             
            கைலாசம்போல்  தலைப்பாவும்கட்டியாழ்ச்சியாடும் 
            மலைபுங்கவனும் 
            கிளிகளுக்கு பச்சைபரவதானியளிக்கும்     
            வயல்விதானங்களும்

            நீலாகாசமும் தென்னைமரங்களும் 
            நறுமணம் கலந்த மாசில்லாக்காற்று 
            விசிறியேந்தும் கன்னியாகுமரியே  உனக்கு
                                                   வந்தனம் !!   
              
               
           

Comments

  1. அற்புதம்...மெல்லிய மலையாள மொழியின் தூவலில் சிலிர்த்து நிற்கவைக்கும் தூலிகை துளிகள்...வலையுலகின் வானில் துருவ நட்சத்திரமாய் மின்னிட என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செய்தி மழையில்.....!

பூஜைக்காகாத காகிதபூ....

அம்புலிப் பொண்ணை காப்பாற்று