( இப்படம் கோதுமை மாவில் செய்யப்பட்டது ) கோதுமை பொம்மை பேசுவது ....! பார்த்தீர்களா .... இப்படியும் என்னை வடிவமைக்கலாம் ..! நான் போசியா ( poaceae ) குடும்பதில் பிறந்தவ ... என்னுடய சிற்றினம் triticoae , பேரினம் tritium... தெரியுமா ..? மெசோப்பட்டோமியா காலத்திலயே என்னோட முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் . எங்களோட பூர்வீகம் தென்மேற்கு ஆசியாவாம் ... முழு தானியமாக என்னை சாப்பிடுவது சிறப்பாம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிற தன்மையும் எனக்கிருக்கு . ஏன் என்றால் என்கிட்ட நிறைய தாதுப் பொருட்கள் இருக்கின்றன . பொட்டாசியம் , மக்னீசியம் , தயாமின் இரும்பு , சிங் ,( zinc) பி . வைட்டமின்கள் ...... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் .... இப்போ உங்களுக்கு என் மேலே கொஞ்சம் மதிப்பு வந்து விட்டதா ..? கேளுங்க .. கேளுங்க ... உங்க நரம்பு மண்டலத்தை எனது தயாமின் மேம்பட செய்யும் . இம்மாதிரி , நார்சத...