Posts

பூஜைக்காகாத காகிதபூ....

Image
வழி தவறி வாழ்வின் சுமையும்  தாங்கி.... நிழல் தேடினாள் பேதையொருத்தி... இளங்காற்று   வீசும் ஆலமரத்தினடியில் அடைக்கலம் கொண்டாள்.. தீயென எரியும்  கத்திரி வெயில்.. அதனினும் எரியும் வயிறும்... அருந்தினாள் கொஞ்சம் தண்ணீர் மட்டும்..! இரு கைகளால் தலையை தாங்கி , பார்த்தாள்.. ஒரு செல்லாதென விலக்கப்பட்ட ஐநூறு ரூபாய் நோட்டு...! தரையில்.. மெல்ல கையில் எடுத்தாள்.. நோட்டை, வரட்டு சிரிப்புடன் உரைக்கிறாள்...!! புத்தம் புதிதாய் நோட்டாக ஜன்மம் எடுத்து நீ... பணக்காரர்களின் அறைகளில் பத்திரமாக தூங்கியிருப்பாய்.. கோவில் உண்டியலில் குறுக்கும் நெடுக்குமாய் படுத்திருப்பாய்.. நல்ல நாளில் குழந்தைகளுக்கு பரிசாக விளங்கியிருப்பாய்.. சிறுவர்களுக்கு கட்டணம்.. பூசாரிக்கு தட்சணை.. கள்வர்க்கு கள்ளப்பணமாய் வாழ்ந்திருப்பாய்... மீனவர் கூடையில் மீன் வாடையில் தாங்கவும் தூங்கவுமுடியாமல், தவித்திமிருப்பாய்.. பலசரக்கு கடையில், பணப்பெட்டியில் சில்லறைக்கூட்டத்தில் கசங்கி இருந்திருப்பாய்... கடைசியில்... கரும்பின்  சக்கையாய் போன இந்த ப...

காந்தாரி...ஒரு கண்ணோட்டம்...

Image
( இது என்னுடய  கண்ணோட்டம்  மட்டுமே...) இன்று, குருஷேத்திரப் போரின் இறுதி நாள்... குருவம்ச பேரழிவின் சின்னமாக யுத்தபூமியில் சின்னாபின்னமாக கிடக்கும் போர்வீரர்களின் சட...

அம்புலிப் பொண்ணை காப்பாற்று

Image
அந்திப்பெண் அழுகிறாள்.. பிரசவப் பெருவலியில்.. துடிக்குமந்த வேதனையில் செந்தூரம் வழிகிறது... இரவுத்தாதி இருளென்னும் போர்வை கொடுக்கிறாள்.. புல்லினக் குருவிகள் குலவ...

செய்தி மழையில்.....!

Image
செய்திகள் ஒரு மழையாய் பெய்து முடிந்திடும்.... மண்ணில் தடங்களும் மாறி விடும்... சில செய்திகள், ஓக்கி புயலாக மனதில் கெடுதியின் பீதி பரப்பும்... நிகந்த நஷ்ட ஈடுகள் நாளை ஏட...